search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீலாதுன் நபி"

    மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கவர்னர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். #MiladUnNabi
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீலாதுன் நபி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இறை தூதர் முகமது நபியின் பிறந்தநாள் மீலாதுன் நபி விழாவாக கொண்டாடப்படுகிறது. இறைதூதர் மனிதர்களின் மிக உயரிய பண்புகளான ஒழுக்கம், அன்பு, கருணை மற்றும் தர்ம சிந்தனையுடன் திகழ்ந்தார். மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறை தூதரின் சிறந்த கொள்கைகளான அன்பு மற்றும் சகிப்பு தன்மையை வியாபித்து நமது வாழ்வை சமூகத்தில் மேம்படுத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MiladUnNabi #TNGovernor #BanwarilalPurohit
    இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #MiladUnNabi #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மீலாதுன் நபி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “பிறருக்கு உதவி செய்பவன், சினத்தை அடக்குபவன், பிறரை மன்னிப்பவன் இவர்களுக்கு இறைவன் எப்பொழுதும் இரங்குவான்”, “பிறருக்கு உதவக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும் அலட்சியப்படுத்தாதே, மற்றோருடன் அன்போடும் ஆதரவோடும் பழகு, உன்னிடம் இருப்பது தண்ணீரேயானாலும் அத்தண்ணீர் தேவைப்படுவோர்க்கு அதை அளித்து மகிழ்ந்திடு” போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் அருட்போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும், அமைதியும் தழைத்தோங்கும்.

    அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆண்டு தோறும் 6 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கிட அரசாணை வெளியிட்டு, மானியம் வழங்கி வருகிறது.

    இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MiladUnNabi #EdappadiPalaniswami
    ×